கிணற்றுக்குள் விழுந்த பசுமாடை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பூசாரிப்பட்டியில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 6 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாடு தடுப்பு சுவர் இல்லாத 70 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
இதனை அடுத்து தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுவை பத்திரமாக மீட்டனர்.