Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துலாபுரத்தில் ராக்கம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நாகலட்சுமி(44) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக ராக்கம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் தாய் இறந்த துக்கத்தில் இருந்த நாகலட்சுமி யாரிடமும் பேசாமல் அழுது கொண்டே இருந்துள்ளார்.

நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் குதித்து நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாகலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |