Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…மனம் மகிழ்ச்சியாக காணப்படும்..பணவரவு திருப்தியாக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். பூமி விற்பனையால் லாபம் ஏற்படும். கடல் தாண்டி வரும் செய்திகள்  மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இன்று ஏற்படும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடைபெறும்.

திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலனை இன்று கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரிடம் ஒத்துழைப்பும் இருக்கும்.

சுதந்திரமான எண்ணங்கள் இன்று உங்களுக்கு ஏற்படும். அதுமட்டுமில்லை மிக முக்கியமாக நீங்கள் செய்யக்கூடியவை  என்னவென்றால் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும். தொலைபேசியில் பேசிக் கொண்டு எல்லாம் செல்ல வேண்டாம். அதுமட்டுமில்லை பணக்கடன் யாரிடமும் நீங்கள் கடனாக வாங்க வேண்டாம், நீங்களும் மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம் .

முக்கியமாக வாக்குறுதிகள் ஏதும் தர வேண்டாம். இதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாகவே இன்று  நீங்கள் நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக கவனித்து பாடங்களைப் படியுங்கள், நிதானமாக செயல்படுங்கள்.

ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள், இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப்பெருமான் வழிபாட்டுடன் காரியங்களை தொடங்குங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |