Categories
தேசிய செய்திகள்

ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… சுற்றுலாப் பயணிகளுக்கு தடை…!!!!!!!

ஒகேனக்கல்லில் கடந்த வாரம் 2,50,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் படிப்படியாக தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

மேலும் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியில் இருந்து 35,000 கனடியாக அதிகரித்திருப்பதால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ஓகேனக்கல் காவிரி கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 31 தினங்களாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.

Categories

Tech |