அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்த மக்களை குறிவைத்து கொலை செய்யும் பயங்கர கொலையாளியால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் சிலர் வசிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை குறி வைத்து கொலை சம்பவங்கள் நடக்கின்றது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மர்மமான முறையில் இந்த கொலைகள் நடக்கிறது.
தற்போது வரை, அந்த மர்ம கொலையாளியால் நான்கு நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் நான்கு பேரும் வீதிகளில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கு சென்றபோதும், தனியாக இரவு சமயங்களில் சென்ற போதும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம் சமூக மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
இதனால் இரவு நேரத்தில் தனியாக ஆண்கள் வெளியில் செல்ல கூடாது என்றும் இரண்டு அல்லது மூன்று நபர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தற்போது வரை அந்த கொலையாளி அடையாளம் காணப்படவில்லை. அவர் கண்டறியப்படும் வரை, எங்களுக்கு நிம்மதி கிடையாது என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.