விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாளாகவே இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.
இன்று பணவரவு கூடும். உடல்சோர்வு மட்டும் கொஞ்சம் இருக்கும். கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை கொஞ்சம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும், நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று மாணவ செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள்.
பொறுமையாக செயல்படுங்கள், படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்