Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. தாயை தகாத வார்த்தைகளால் பேசிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சிறுமியின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டரமாணிக்கம் பகுதியில் பாண்டி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டிக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறுமியின் தாய் பாண்டியை கண்டித்துள்ளார். அப்போது பாண்டி சிறுமியின் தாயை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில், போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் பாண்டியை கைது செய்தனர்.

Categories

Tech |