Categories
மாநில செய்திகள்

விநாடிக்கு 9,237 கன அடி: இடுக்கி அணைக்கு போகும் உபரிநீர் அதிகரிப்பு….!!!!

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,451 கனஅடியாக இருந்ததால், இடுக்கி அணைக்கு போகும் உபரிநீரானது விநாடிக்கு 9,237 கன அடியாகவும் சென்றது. முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க் கிழமை நிலவரப்படி அணையின் நீர் மட்டம்,139.55 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு 7,012 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது.

அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 10,451 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீரின்அளவு வினாடிக்கு 2,144 கன அடியாகவும் இருந்தது. இடுக்கி அணைக்கு உபரிநீர் வெளியேற்றுவதற்காக (மொத்தம் உள்ள 13 மதகுகளில்) வெர்டிகிள் அமைப்புள்ள 10 மதகுகள், 90 செ.மீ.உயரமும், ரேடியஸ் அமைப்புள்ள 3 மதகுகள், 60 செ.மீ., உயரமும் உயர்த்தப்பட்டு அதன் வழியாக விநாடிக்கு 9,237 கனஅடியாக வெளியேற்றப்பட்டு இடுக்கி அணைக்கு சென்றது.

Categories

Tech |