இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கும் இடையே மூன்று நாட்களாக போர் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் குழு ஆகியோர் தாக்குதலை நிறுத்துவதற்காக ஒப்புக்கொண்டுள்ளனர். இரு தரப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இடையே நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கூறியது, இந்த தாக்குதலுக்கான முழு பொறுப்பும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பையே சேரும்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் காசா பகுதியில் வசிக்கும் மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு போர் குற்றங்கள் புரிந்தது. அப்பாவி பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் இஸ்ரேல் பொதுமக்களை குறி வைத்து ராக்கெட் ஏவுகணைகளை ஏவினர். இது இரட்டிப்பு போர் குற்றமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு அமெரிக்க நாட்டின் ஐ.நா. பிரதிநிதி பிரதிநிதி ஆதரவாளாக பேசினார். ஆனால் இதற்கு பாலஸ்தீன தூதர் மறுப்பு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாததால் அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.