Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அழிவுகளையும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் இந்த உதவிகள் கிடைக்கும். இந்நிலையில் ரேஷன் அட்டையை பலரும் தயாராக பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றை மலிவு விலைக்கு வாங்கி அவற்றை கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

இதனால் தகுதி உள்ள பலருக்கும் ரேஷன் உதவிகள் கிடைக்காமல் போகின்றன. இந்நிலையில் தகுதி இல்லாதவர்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதை தடுக்க மத்திய அரசு புதிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதாவது தகுதி இல்லாதவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான உத்தரவு அனைத்து மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தகவலின் படி, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மொத்தம் 4.74 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் கண்காணிப்பில் உள்ளது. இதில் தகுதி இல்லாதவர்களாக இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பலரும் தங்கள் ரேஷன் கடை சரண்டர் செய்து வருகின்றனர். எனவே நிறைய வசதி படைத்தவர்கள் ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளவர்களும் தங்களுடைய ரேஷன் கார்டை திரும்ப ஒப்படைக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |