Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்கள் யாரும் “வாக்குறுதி கொடுத்து சிக்கி கொள்ள வேண்டாம்”..இன்றையமுழு ராசிபலன் இதோ..!!

மேஷராசி அன்பர்களே, இன்று இனிய செய்தி இல்லம் வந்து சேரும் நாளாகவே இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோக முயற்சி கைகூடும். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் கையில் வந்து சேரும். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பும் முழுமையாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று துன்பங்கள் தீர்வதற்கு முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எதிலும் வேகத்தை குறைத்து பொறுமையாக செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனம் வேண்டும். பயணத்தால் உருவாகும்.

இன்று  சில முக்கியமான காரியங்கள் கூடுதல் கவனத்துடன் செய்வது ரொம்ப நல்லது. அதிக உழைப்பு இன்று தேவைப்படும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருப்பதால் கொஞ்சம் பொருட்கள் மீது கவனமாக இருங்கள்.  கோபத்தை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

தைரியமாக எதையும் செய்வீர்கள். துணிச்சலுடன் காரியங்களை எதிர்கொள்வீர்கள். இன்று திருமண முயற்சிகள் நல்ல வெற்றியை கொடுக்கும். காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். இன்று  மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள், கல்வியில் வெற்றியும் பெறுவார்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும், அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்:ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும், நாளாகவே இருக்கும். குடும்பத்தினர் உங்கள் தொழில் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறையாக இருங்கள். மாற்று இனத்தவர்களிடம்  உதவிகள் கிடைக்கும். இன்று  எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொழில் வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்திவீர்கள்.

எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணியை இன்று  எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். பயணம் ஓரளவு நன்மையே கொடுப்பதாகவே அமையும். இன்று  மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்

கடகம் ராசி அன்பர்களே, இன்று உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாகவே இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று  எதிலும் தயக்கமும், பயமும் இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக காரியங்களை செய்வீர்கள்.

பெரியவர்கள் மூலம் இன்று உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பணம் தட்டுப்பாடு நீங்கும். மனக்குழப்பம் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர் பார்த்த வெற்றியும் கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுகட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டும். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது.

கூடுமானவரை இன்று பொறுமையாக செயல்படுவது ரொம்ப நல்லது. இன்று  மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து  பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள், ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கொண்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்ட்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும்  7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று முருகன் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். கைமாற்றாக, கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்று  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம்  கூடும். உங்கள் பொருட்களின் மீது கவனமாக இருங்கள். உங்களுடைய சாதுர்யமான செயல்களால் லாபம் இன்று  உண்டாகும்.

உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றியில் இருக்கும். இன்று காதல் கைகூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.

மேற்கல்வி காணும் முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை  முறையாக கையாளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

கன்னிராசி அன்பர்களே, இன்று கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும், நாளாகவே இருக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று  உங்களது செயல்களால் மற்றவர்களிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும்.

விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமும் பயமும் இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உங்களுக்கு முழுமையான உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானமும் உயரும். சகோதரர் வழியில்  ஒற்றுமை ஏற்படும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாக அமையும் .

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகவே கிடைக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம் நிறம்

துலாம் ராசி அன்பர்களே, இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். வீடு கட்டும் முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறு  விலகிச் செல்லும். ஒரு பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய  வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் அன்பு கூடும். அக்கம்பக்கத்தினர் இடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் ரொம்ப நல்லது.

இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,  ஆரஞ்சு நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று  நீங்கள் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான  திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாளாகவே இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.

இன்று பணவரவு கூடும். உடல்சோர்வு மட்டும் கொஞ்சம் இருக்கும். கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை கொஞ்சம் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும், நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று மாணவ செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள்.

பொறுமையாக செயல்படுங்கள், படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்

 தனுசு ராசி அன்பர்களே, இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாகவே  இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். யோசனைகளைக் கேட்டு நடந்தால் நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும். இன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.

அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். பயணம் மூலம் வியாபாரமும் தொழில் விரிவாக்கமும் விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உங்களுடைய நிதிகள் மேலும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன்  மூலம் கடின பணிகளை எளிதாக செய்து முடிப்பார்கள்.

இன்றைய நாள் வெளிவட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும், கல்வியில் வெற்றி பெறக் கூடிய சூழ்நிலையும் இருக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை முழுமையாக செய்யுங்கள் அனைத்து விஷயமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம் நிறம்

மகரம் ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். பூமி விற்பனையால் லாபம் ஏற்படும். கடல் தாண்டி வரும் செய்திகள்  மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இன்று ஏற்படும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடைபெறும்.

திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலனை இன்று கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரிடம் ஒத்துழைப்பும் இருக்கும்.

சுதந்திரமான எண்ணங்கள் இன்று உங்களுக்கு ஏற்படும். அதுமட்டுமில்லை மிக முக்கியமாக நீங்கள் செய்யக்கூடியவை  என்னவென்றால் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும். தொலைபேசியில் பேசிக் கொண்டு எல்லாம் செல்ல வேண்டாம். அதுமட்டுமில்லை பணக்கடன் யாரிடமும் நீங்கள் கடனாக வாங்க வேண்டாம், நீங்களும் மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம் .

முக்கியமாக வாக்குறுதிகள் ஏதும் தர வேண்டாம். இதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாகவே இன்று  நீங்கள் நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக கவனித்து பாடங்களைப் படியுங்கள், நிதானமாக செயல்படுங்கள்.

ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள், இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப்பெருமான் வழிபாட்டுடன் காரியங்களை தொடங்குங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

கும்பம் ராசி அன்பர்களே, இன்று சஞ்சலங்கள் தீரும் நாளாகவே இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பயணத்தால் தேகம்  பாதிக்கலாம். சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது.

இன்று  நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரவு கூடும். கடினமான வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள்.இன்று  பணவரவில் எந்தவித பிரச்சினையும் இல்லை, கடன் பிரச்சினைகள் அனைத்துமே இன்று  கட்டுக்குள் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாகவே தான் இருக்கிறது.

இன்று மாணவர்கள் மட்டும் கல்விக்காக கொஞ்சம் கடுமையாக போராடுவார்கள், படித்த பாடத்தை எழுதி பாருங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

நீலநிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

மீனம் ராசி அன்பர்களே, இன்று தனவரவு தாராளமாக  வந்து சேரும் நாளாகவே இருக்கும். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். திருமண பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். எதிரிகள் உங்களை விட்டு முற்றிலும் விலகி செல்வார்கள்.

இன்று  எண்ணிய காரியங்கள் திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு கொஞ்சம் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் தான் செய்ய வேண்டி இருக்கும்.

சொத்துக்கள் மீது கவனம் இருக்கட்டும் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். உங்களுடைய நிதி மேலாண்மையில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பணம் வாங்கித் தருகிறேன் என்று எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.

இதில் மட்டும் நீங்கள் கவனமாகவே இன்று  நீங்கள் நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு  கல்வியில் எந்தவித தடையுமில்லை. சிறப்பான முன்னேற்றம் இருக்கிறது. ஆசிரியரின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஊதா நிறம்

 

 

 

Categories

Tech |