ரிட்டன் ஆப் தி லெஜன்ட் தலைப்பில் எம்.ஜி மோட்டார் நிறுவனம் ஒரு நிமிட வீடியோ டீசரை வெளியிட்டது. அந்த டீச்சரில் உள்ள புதிய 2 சீட் எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் மாடல் கார் சைபர்ஸ்டர் கான்செப்டை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஓவல் வடிவ ஹெட்லாம்புகள், ரியர் வியூ மிரர்கள், கன்வர்டிபில் ரூப் ஓபனிங், ஸ்வான் டெயில் ஸ்டைல் ஸ்பாய்லர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5g கனெக்டிவிட்டி இந்த காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை மூன்று நொடிகளில் கடக்கும். இதனை அடுத்து முழு சார்ஜ் செய்தால் இந்த புதிய மாடல் கார் 800 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories