போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செங்கோடு மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மோகன் குமார். இவர் நேற்று கோழிக்கால் நத்தம் செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 50 வயது மதிக்கத்தக்க நபர் இவரை வழிமறித்துள்ளார். பின் தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எனக்கூறி ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் மோகன் குமாரும் ஆவணங்களை காண்பித்துள்ளார்.
ஆனால் அவர் ஆவணங்கள் சரியாக இல்லை. அதனால் அபராதம் கட்டுமாறு கூறி இருக்கின்றார். இதனால் சந்தேகம் அடைந்த மோகன் குமார் திருச்செங்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகப்பட்டு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.
அப்பொழுது அவர் ரத்தினம் என்பதும் போலி சப் இன்ஸ்பெக்டர் என்பதும் தெரிய வந்தது. அவர் இதுபோல வெவ்வேறு இடங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி மக்களிடம் பணம் பறித்ததும் மூன்று முறை கைதாகி சிறை சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ரத்தினம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தார்கள்.