தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (10-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:
பெருமாநல்லூர், பழங்கரை துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிைலயங்களில் 10-ந் தேதி (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெருமாநல்லூர் துணை மின்நிைலயத்துக்குட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவபட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் பழங்கரை துணை மின் நிைலயத்துக்குட்பட்ட அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர். நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம்:
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால் மின்மாற்றி கட்டமைப்பு மாற்றி அமைக்கும் பணி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் டூவிபுரம் 3-வது தெரு முதல் 6-வது தெரு வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சாரவாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.
மதுரை மாவட்டம்:
மதுரை எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் மழை கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக 10-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை எல்லீஸ்நகர் மெயின்ரோடு, ஹவுசிங்போர்டு (எம்,எச்,டி,ஆர்.எச். பிளாக்குகள்), குடிசை மாற்று வாரிய வீடுகள் (ஏ முதல் எச் பிளாக்குகள்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள், டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பிஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி.ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா, வசந்தநகர், ஆண்டாள்புரம், அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுதரா அபார்ட்மெண்ட்ஸ்,பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரிவீதி, டவுன்ஹால்ரோடு, காக்கா தோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.