அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரம் பல வருடங்களாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கிறது.
இதனை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாற்ற அரசுக்கு சுகாதாரத்துறை இயக்குனரகம் கருத்துரு சமர்ப்பித்துள்ளது.இதனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ், பாலச்சந்தர், சுரேஷ்பாபு, பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதுனால பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.