செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, 2021 பிப்ரவரி மாதம் நானே நேரடியாக வந்து 100 ஏரிகளுக்கு மேலே நீர் நிரப்புகின்ற அந்த திட்டத்தில், முதற்கட்ட பணியாக சுமார் ஆறு ஏரிகள் நிரப்புவதற்காக திறந்து வைத்தேன். அடிக்கல் நாட்டப்பட்டதும், அம்மாவுடைய அரசு முதற்கட்ட பணியை திறந்து வைத்ததும் அம்மாவுடைய அரசு.
திப்பம்பட்டியில் இருந்து எம்.காளிபட்டி வரை சுமார் 12 கிலோமீட்டர் அம்மாவுடைய அரசு இருக்கின்றபோது, நான் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது குழாய்கள் பதிக்கப்பட்டு முதற்கட்ட பணி முடிவு பெற்று ஆறு ஏரிகள் நிரப்பப்பட்டன. ஆனால் நீர்வளத்துறை அமைச்சர், நேற்றைய முன்தினம் ஒரு முழம் பைப் கூட எடப்பாடியார் ஆட்சியில் போடப்படவில்லை என்று ஒரு தவறான செய்தியை ஊடகத்தின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றார்.
நான் முதலமைச்சராக இருந்தபோது 100 ஏரிகளுக்கு நிரப்புகின்ற பணியை மேற்கொண்டு, பல்வேறு பணிகள் பல்வேறு இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முதல்கட்ட பணி அந்த 12 கிலோமீட்டர் குழாய்கள் அமைத்து, நானே நேரடியாக சென்று அந்த திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு சென்றேன். ஆக வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு பொய்யான தவறான செய்தியை பரப்பி இருக்கின்றார், உண்மை நிலையை அறிந்து பேச வேண்டும். இது ஒரு அற்புதமான திட்டம் என தெரிவித்தார்.