இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின் மகள் ஹரிணி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஹரிணி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பிளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் ஹரிணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஹரிணியின் தற்கொலைக்கான காரணம் தெரியாததால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.