Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு….. அக்.,7க்கு பின்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி திருமலை கோயிலில் வார இறுதியில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள பெற்றோர்கள் திருப்பதி யாத்திரையை ஒத்திவைக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 19 வரை பக்தர்கள் கூட்டம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காணப்படும் என்பதால், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும், பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மங்களகரமான புரட்டாசி மாதம் செப்டம்பர் 18 முதல் தொடங்கி அக்டோபர் 17 வரை நீடிக்கும்.இக்காலத்தில் திருமலை கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்பதால், அக்டோபர் 17க்கு பின் மேலே குறிப்பிட்டவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |