Categories
அரசியல் மாநில செய்திகள்

கொதிச்சு போய் இருங்காங்க…! அவரு C.Mஆகணும்.. எல்லாமே சரி ஆகிடும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  மக்கள் இங்கு மட்டும் கொதிக்க வில்லை. எல்லா ஊரிலும் மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள் தமிழக அரசின் மீது  நிதி அமைச்சருக்கு முழுமையாக தெரியவில்லை என்று தான் நினைக்கின்றேன்.

மதுரையை பற்றி முதலில் அவர் ஒரு ஆய்வு செய்ய வேண்டும். அவர் அந்த துறையை ஆய்வு செய்ய மாட்டேங்கிறார். ஏரியாவுக்குள்ள வர சொல்லுங்க. முதல்ல நிதி அமைச்சர் தொகுதி மக்களை சந்திக்கணும்.  தொகுதியில் என்ன பிரச்சனை?  என்று பார்க்க சொல்லுங்க.

அரசு ஊழியர்களை, பொதுமக்களுக்கு கொடுக்கின்ற மானியங்கள்  எல்லாம் கொடுக்கக்கூடாது என்பது மாதிரி அவரு பேசுகிறார் என்ற அடிப்படையில் இந்த மாதிரி பேசுவதன் மூலமாக,  அரசாங்கத்துக்கு கெட்ட பெயர் வரும். அப்படின்னு அவருக்கு தடை விதித்த மாதிரியும் கேள்விப்படுகின்றேன். உண்மையா என்னன்னு ? தெரியவில்லை.

ஆனால் ஒன்று இவர்கள் தேர்தல் அறிக்கையில்….  இந்த மாதிரி பாவப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் ஆயிர ரூபாய் குடும்பத்துல கொடுப்போம். என்னென்ன வசதிகள் இருப்பவர்களுக்கு கொடுக்க மாட்டோம் அப்படின்னு எந்த அறிவிப்பை தெரிவிக்கவில்லை.

தமிழகத்துக்கு உண்மையான விடியல் வேணுமா ? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகப் பொதுச் செயலாளர், நம்ம வீட்டு பிள்ளை, நம்முள்ள ஒருவர், நம்ம விவசாயி, நம்ம உண்மையான தமிழன் அவர வந்து முதலமைச்சராகினால் இதற்கு எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும் அப்பா என தெரிவித்தார்.

Categories

Tech |