Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்குதான் பூங்கா அமைக்கப்படும்….. நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா….. கலந்து கொண்ட அதிகாரிகள்…..!!!!

பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நியூ காவேரி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 16.410 சதுரடி பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலம் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கட்டிடம் கட்ட ஆரம்பித்துள்ளார். இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டுமான பணியை நிறுத்தினர். அதன் பிறகு நேற்று 31 1/2 லட்சத்து ரூபாய் ஒதுக்கீட்டில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ராமநாதன், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மண்டல தலைவர் ரம்யா சரவணன், கவுன்சிலர் தமிழரசி, சுகாதார ஆய்வாளர் மோகன் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் மாநகராட்சி மேயர் ராமநாதன் புதிய பூங்கா அமைப்பதற்கான அடிக்கலை நாட்டியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வதற்கு நடைபாதை போன்ற வசதியுடன் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. இங்கு   மரக்கன்றுகள்  நட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |