தென்காசி மீரான் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மீரான் மருத்துவமனையில் திருவனந்தபுரம் கிங்ஸ் மருத்துவமனை சார்பாக மேலாண்மை இயக்குனர் டாக்டர் சஹதுல்லா உத்தரவின் பேரில் ஐ.சி.யு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆம்புலன்ஸில் அனைத்து நவீன வசதிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் நிறுவன டாக்டர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்க தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனுலாப்தீன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.