இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர உதவி கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று சுயசார்பு இந்திய திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூன்று லட்சம் கோடி வரை கூடுதல் கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 99,58,903 நிறுவனங்களில் பெண்களால் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே 17,96,408 ஆகும்.
மேலும் மத்திய அரசின் மற்றொரு திட்டமான பிரதமரின் வேலை உருவாக்க திட்டத்தின் கீழ் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதனைப் போலவே 2020 ஆம் ஆண்டு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 11,92,689 பெண்களுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களிலும் குறிப்பாக பெண்களுக்கே அதிக நிதி உதவி வழங்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.