தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஆக.,3 முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகின்றது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கப்பட்டது. இதில் 80 கிலோ எடைவரைப் பொருட்களை அனுப்ப 390 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளில் முக்கிய நகரங்களில் உள்ள 75 பேருந்து நிலையங்களில் பார்சல் அனுப்பும் வசதி உள்ளதாக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது முன்பதிவு கவுண்ட்டரில் பணம் செலுத்தி பார்சலை அனுப்பலாம். செல்போனில் ஆப் மூலம் எந்த பகுதியில் இருந்தும் பணம் செலுத்தி பார்சல் அனுப்பும் வசதி விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.