Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது”…… ஐநாவுக்கான இந்திய தூதர் அதிரடி….!!!!

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது அதில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது. பயங்கரவாதம் அச்சுறுத்தல்கள் உலக அளவில் அதிகரித்து காணப்படுகிறது . உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள பயங்கரவாதம், உலகம் முழுமைக்கும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக உள்ளது என்பதை எங்களது பரிசீலனையின் முடிவு ஆகும்.

அதனால் உலகளாவிய இந்த சவாலுக்கான எங்களது மறுமொழியானது ஒன்றிணைந்த ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் விரிவாக்கம், சர்வதேச சமூகத்தின் முழு கவனம் பெற தகுதி வாய்ந்தது. இதனை தனிப்பட்ட அச்சுறுத்தலக்கா பார்க்காமல் உலகின் பிற பகுதிகளுக்கு கூட பரவக்கூடிய ஆற்றல் வாய்ந்தது என்று பார்க்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதனையடுத்து கடந்த ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலின் 20 வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கூட இந்திய வெளிவிவகாரம் மந்திரி, கூட்டாக பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை தொடர்ச்சியாக வழங்கினார்.அதனை நீங்கள் நினைவு கூறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |