திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 20 வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆந்திரா, உத்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று, போட்டியில் சிறப்பாக விளையாடி பரிசுகளை குவித்தனர். அதன்படி கட்டா என்னும் தனிப்பிரிவில் 2 பேர் முதலிடம் பிடித்தனர்.
அதனை தொடர்ந்து 4 வீரர்கள் 2 வது இடம் பிடித்தனர். 19 பேர் 3 வது இடம் பிடித்து அசத்தினர். அது மட்டுமில்லாமல் குமிதே பிரிவில் ஒருவர் 2 வது இடம் பிடித்தார். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி வீரர்களை பாராட்டி பரிசு வழங்கினார். இதில் கராத்தே பயிற்சியாளர் ராஜகோபால், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.