தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மையான மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனைப் போல 11 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், பட்டயப்படிப்பு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவ-மாணவிகள் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்காலம். எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.