அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நீங்கள் நாட்டு மக்களை மறந்து மக்கள் விரோத ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற வேலையில் எச்சரிக்கின்றோம், மக்களை மறந்தால் அருகில் இருக்கின்ற இலங்கை நாட்டில் என்ன நிகழ்ந்ததோ அதே நிலைமை இங்கேயும் நிகழும். மக்களுக்குதான் ஆட்சி, மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் ஆட்சி, உங்களுடைய குடும்பத்தினுடைய பிரச்சினை தீர்ப்பதற்கு அல்ல.
குடும்பம் வளர்வதற்காக அல்ல, குடும்பத்தில் இருக்கின்ற ஒரு உறுப்பினர்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக அல்ல. இவை எல்லாம் மறந்து இப்போது செயல்பட்டு கொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் எச்சரிக்கின்றோம்.இனியாவது மக்களைப் பற்றி சிந்தியுங்கள், மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்யுங்கள், மக்கள் துன்பத்திலே வேதனைகளை இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
விலைவாசி உயர்வு பற்றி ஸ்டாலின் கவலைப்படவில்லை, போட்டோ சூட் போட்டு இன்றைக்கு போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார், தினந்தோறும் பத்திரிக்கையில் போஸ் கொடுப்பதோடு அவருடைய பணியில் முடிந்து விட்டது. மக்களுக்கு எந்த நன்மையையும் ஆட்சியில் கிடைக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 14 மாத காலம் ஆகிறது. இந்த 14 மாத காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்தார் ,கொண்டு வந்தரா?
நான் முதலமைச்சராக இருந்தபோது, புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருக்கின்றபோது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார் இந்த மாவட்டத்திற்கு…. பிரம்மாண்டமான சாலைகளை அமைத்துக் கொடுத்தோம்.. இங்கே பழனியிலே மக்கள் அதிகமாக வருவதை முன்னிட்டு சுமார் 58 கோடி ரூபாய் ஒதுக்கி திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம் என தெரிவித்தார்.