Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவன் மீது மோதிய கார்…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஒரு உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர் குடும்பத்துடன் உணவகம் அருகில் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (16) கோவை ரோட்டிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் சந்தோஷ் தன் நண்பர்களுடன் ஆச்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் சந்தோஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த கோர விபத்தில் மாணவன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்தோஷின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த சந்தோஷின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது சிகப்புநிற கார் என்பது தெரியவந்தது.

அதன்பின் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த கார் வடுகபாளையத்தை சேர்ந்த சுஜித் (22) என்பவருக்கு சொந்தமானது என்பதும், இவர் கோவை சரவணம்பட்டியிலுள்ள ஒரு நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. பின் புகாரின்படி காவல்துறையினர் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சுஜித் மீது வழக்குபதிவு அவரை கைது செய்தனர். அத்துடன் விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories

Tech |