Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: இரு பள்ளி மாணவர்கள் மரணம்

மத்திய பிரதேச மாநிலம் ராம்கிரியா கிராமம் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் ராம்கிரியா கிராமத்தின் அருகே பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு 11- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை 10 மணியளவில் பன்னாவிலிருந்து பஹடிகெடா கிராமத்துக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றதாக துணை காவல் ஆய்வாளர் சித்தார்த் ஷர்மா தெரிவித்தார்.

இந்த விபத்தில் ராம் பாரோஸ், லக்ஷமன் யாதவ் என்னும் இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த 21 நபர்களில் 15 பேர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்ததும் பேருந்து ஒட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

Categories

Tech |