Categories
தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஸ்ரீரம்பூர் பகுதியின் பெண் கவுன்சிலர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

மேற்குவங்க மாநிலத்தின் ஸ்ரீரம்பூர் நகராட்சியின் பெண் கவுன்சிலர் நாத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான இவர், நீண்ட காலமாக அக்கட்சியின் உறுப்பினராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், இத்தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து, சந்தன்னகர் காவல் ஆணையர் ஹுமாயூன் கபீர் கூறும்போது, “தற்கொலை செய்துகொண்டவர் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள குடிமை அமைப்பின் வார்டு எண் 16இன் பெண் கவுன்சிலர் ராம நாத்(48). இவர் நேற்று காலை 11.30 மணியளவில் ஸ்ரீராம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த உள்ளூர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொணடு சென்றனர். ஆனால் அவர் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

மருத்துவமனைக்குச் சென்ற மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திலீப் யாதவ் கூறுகையில், ”நாத் உடன் அனைவருக்கும் நல்ல உறவு இருந்தது. இவருடன் சில நாட்களுக்கு முன்புதான் பேசினேன். இவருடைய தற்கொலைக்கும், அரசியலுக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார். இவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நாத்தின் உறவினர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |