கடலூர் திருவந்திபுரம் அருகே சாலக்கரை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சம்பவத்தன்று தெருக்கூத்து நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த திருவந்திபுரம் சன்னியாசி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் அங்கிருந்து தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த டம்ளரை எடுத்து மது அருந்ததிதாக கூறப்படுகின்றது.
இதனை பார்த்த சாலை கரையைச் சேர்ந்த தேவநாதன் மகன் பாலா என்கிற பூபாலன் ராதாகிருஷ்ணன் மகன் ரஞ்சித் போன்றோர் தட்டி கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இருதரப்பை சேர்ந்து நான்கு பேர் மீது போலீஸர் வழக்கு பதிவு செய்து பாலா ரஞ்சித் அய்யனார் போன்றோரை கைது செய்துள்ளனர்.