கோவில் ரதத்தை அலங்கரிப்பதற்கான துணியை ஒன்றிய தலைவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கோட்டத்தில் பிரபலமான பொண்ணு முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருக்கிறது. இதன் காரணமாக புதிதாக தேர் வாங்கப்பட்டு தேர் திருவிழா நடத்துவதற்கு கோவில் நிர்வாகமும், கிராம மக்களும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரதத்தை அலங்கரிப்பதற்காக துணி வாங்குவதற்காக கிராம மக்கள் ஒன்றிய
இதை ஏற்றுக் கொண்ட ஒன்றிய தலைவரும் புதிதாக துணி வாங்கி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த அலங்கரிக்கப்பட்ட துணியின் விலை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட விவசாய அணி தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.