Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: மக்களுக்கு கூடுதல் பணம்?…. வாக்குறுதி அளித்த முன்னாள் நிதியமைச்சர்….!!!

பிரித்தானியா நாட்டின் எரி சக்தி நெருக்கடிக்கு இடையில் ஏழைகளுக்கு நிதியுதவி செய்வதாக பிரதமர் போட்டியாளர் ரிஷிசுனக் வாக்குறுதி அளித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ரிஷிசுனக், அந்நாட்டின் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டால், அதிகரித்துவரும் வீட்டு எரிசக்தி கட்டணங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவ கூடுதல் பணம் வழங்குவதாக உறுதியளித்தார். கன்சர் வேடிவ் கட்சியின் தலைமைத் தேர்தலில் இறுதிப்போட்டியாளராக உள்ள 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் அதேநேரத்தில், அரசாங்கத்தின் “Efficiency savings” வாயிலாக மக்களுக்கு நிதி வழங்க உறுதியளித்தார்.

Efficiency savings என்பது எந்தவொரு நிதி ஆண்டிலும் ஒரு நகரத்துறை (அல்லது) ஏஜென்சியின் செலவினங்களைக் குறைப்பதன் காரணமாக 18-75 பிரிவின் கீழ் ஊக்கத்தொகைகளுக்குக் கிடைக்கும் பணமாகும். இதனிடையில் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான கார்ன்வால் இன்சைட் வழங்கிய முன்னறிவிப்பின் அடிப்படையில், பிரித்தானியாவில் இந்த குளிர் காலத்தில் வீட்டு வெப்பமூட்டும் பில்கள் முன் கணித்ததைவிட மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மக்களுக்கு அதிகளவு ஆதரவு தேவைப்படும் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை என ரிஷிசுனக் கூறினார்.

மேலும் எவ்வளவு பில்கள் உயரும் என்பது தெரிந்ததும், நான் இத்திட்டத்தை செயல்படுத்துவேன் என்று கூறினார். 2 இறுதிப் போட்டியாளர்களுக்கான பிரச்சாரத்தில் இப்பிரச்சினை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. போட்டி வெளியுறவுச்செயலர் லிஸ் ட்ரஸ் வரிகளைக் குறைப்பதற்கான உறுதி மொழிகளில் கவனம் செலுத்தினார். இதற்கிடையில் முன்னாள் நிதியமைச்சர் எச்சரித்து இருப்பது உயர் பணவீக்கத்தை இன்னும் மோசமாக்கும் அபாயம் இருக்கிறது என கூறப்படுகிறது. அத்துடன் சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரும் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தங்கள் பிரச்சாரத்தைத் தொடர்கின்றனர். வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்து, புது கட்சித்தலைவர் செப்டம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படுவார்.

Categories

Tech |