புளோரிடாவில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் Mar-a-Lago கிளப் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 10 பெட்டிகள் அடங்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சோதனை முன்னாள் ஜனாதிபதி தனது நிர்வாகத்தின் முடிவில் எவ்வாறு முக்கிய ஆவணங்களை கையாண்டார் என்பது குறித்த நீதித்துறை விசாரணையின் ஒற்றை பகுதியாக நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேடுதல் வேட்டை ஜனவரி 6 ஆம் தேதி திகதி அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரம் தொடர்பான நீதித்துறையின் தனி விசாரணைக்கும் இவற்றிக்கும் தொடர்பில்லாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய ஆவணக் காப்பகங்கள் மற்றும் பதிவுகள் நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் 15 பெட்டிகளில் முக்கியமான வெள்ளை மாளிகைக்கு சொந்தமான ஆவணங்களை கைப்பற்றியது, இவை முறையற்ற முறையில் Mar-a-Lago-விற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக ஜர்னல் அறிக்கைகள் தெரிவித்துள்ளது.