இமாச்சலப் பிரதேசம் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் சிம்லாவில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் ரக்சாபந்தன் திருவிழாவை முன்னிட்டு அவருக்கு பள்ளி மாணவ மாணவிகள் ராக்கி கட்டி விட்டு ஆரத்தி எடுத்துள்ளனர். ரக்சா பந்தன் தினம் வருடம் தோறும் சகோதரர் மற்றும் சகோதரியின் பாசத்தினை வெளிப்படுத்தும் விதமாக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சா பந்தன் தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு ராக்கி கயிறுகள் விற்பனையும் சூடு பிடித்திருக்கின்றது.
இந்த நாளில் தனது சகோதரரின் மணிக்கட்டில் சகோதரி ராக்கி கட்டி விடுவது வழக்கமாகும். சகோதரர் தன்னை பாதுகாப்பார் என்ற உறுதி மொழியும் சகோதரி பெற்றுக்கொள்கின்றார். இதற்கு பதிலாக ஒரு உறுதிமொழியுடன் சகோதரரும் தனது சகோதரிக்கு சில பரிசுகளை வழங்குவார். இந்த நிலையில் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குருக்கு மாணவிகள் ராக்கி கயிறு கட்டி விட்ட பின் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, பெண்களின் பங்கு இன்றி அரசு நடத்துவது. சாத்தியமல்ல குடும்பம் நடத்துவதும் அவர்கள் இல்லாமல் சாத்தியம் இல்லை என கூறியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்த பெண்கள் முதல் மந்திரி ஜெயராம் தாக்குருக்கு ராக்கி கயிறு கட்டிவிட்டனர்.