மினிவேனில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை சாலையில் கோவில்பட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மினி வேன் டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அந்த சோதனையில் மினி லாரியில் 50 கிலோ எடையுள்ள 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசியுடன் மினிவேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மினிவேன் டிரைவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.