நடிகர் விக்ரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் குமார் தயாரித்துள்ளார்.
இந்பிலையில் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனையடுத்து தற்போது படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் கோப்ரா ரிலீஸ் ஆகும். இதே தேதியில் பா. ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
#Cobra 🐍 (Tamil-Telugu-Kannada) In Theatres Worldwide From August 31 🔥#CobraFromAugust31#ChiyaanVikram
An @AjayGnanamuthu Film🎬
An @arrahman Musical🥁@RedGiantMovies_ @Udhaystalin @NVR_Cinemaoffl @IrfanPathan @SrinidhiShetty7 @SonyMusicSouth @UrsVamsiShekar @proyuvraaj pic.twitter.com/IUIIiTkoCB— Seven Screen Studio (@7screenstudio) August 9, 2022