Categories
அரசியல்

இபிஎஸ்க்கு சிக்கல்…. “நெருக்கடி கொடுக்கும் முப்பெரும் தலைகள்”…. கலக்கத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள்….!!!!!;!

ஓ பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நீதிமன்றம்  போன்றவற்றில் முறையிட்டிருக்கின்றார். இருந்தபோதிலும் சட்ட போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கி இருந்தது. இருப்பினும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் பின் வாங்கவில்லை.

தன்னால் முடிந்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றார் ஓ பன்னீர்செல்வம். இதனால் அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் வலம் வருகின்றனர். இதற்கு இடையே எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்ள வி கே சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் இணைய இருப்பதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் செய்திகள் வெளியானது. இந்த சூழலில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஓ பன்னீர் செல்வத்துடன் மீண்டும் இணைந்து பணியாற்று வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக தி டைம் ஆப் இந்தியா நாளிதழில் பேசிய  டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், வருங்காலத்தில் ஓ பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைவதற்கு கூட வாய்ப்புள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோடு ஒருநாளும் நான் சேர மாட்டேன் ஏனென்றால் அவர் நம்பிய எங்களுக்கும்  கட்சி தொண்டர்களுக்கும் துரோகம் செய்திருக்கின்றார். 2024 ஆம் வருடம் எங்களை மதித்து கூட்டணிக்கு அழைக்கும் எந்த தேசிய கட்சியோடும் கூட்டணி வைக்க தயார். நாங்கள் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் சுயமரியாதை கொண்டவர்கள் கூட்டணி இல்லை என்றாலும் கூட எங்களுக்குரிய அடையாளத்தோடு நாங்கள் போட்டியிடுவோம் என அவர் கூறியுள்ளார்.

இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த ஓ பன்னீர் செல்வத்துடன் இணைய டிடிவி தினகரன் ஓகே சொல்லி இருக்கின்றார். இது ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் ஏற்கனவே சசிகலாவுடன் ஓ பன்னீர்செல்வம் கைகோர்க்க இருப்பதாக தகவல் பரவி வருகின்ற சூழலில் தற்போது டிடிவி தினகரனும் இணைய  இருப்பதாக பரவி வரும் செய்திகள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |