பீகாரில் எட்டாவது முறையாக முதல்வராக பதவியை நிதிஷ்குமார் ஏற்றுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கிறார். பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.முதல்வராக நிதீஷ்குமார், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இன்று பதவி ஏற்றனர்.
தற்பொழுது பதவியேற்பு விழா என்பது ஆரம்பமாகி முதல் நாளாக முதலமைச்சராக நிதீஷ்குமார் பொறுப்பேற்று இருக்கிறார். இனி அடுத்தடுத்து தான் யார் யாரெல்லாம் ? பதவி ஏற்க போகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவரும். மொத்தமாகவே பீகார் அமைச்சரவையையே மாற்ற வேண்டும் என்ற இடத்தில் தான் பீகார் அமைச்சரவை இருக்கிறது.
தற்போது இரண்டாவது முறையாக நித்திஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ஏற்கனவே இருந்த அமைச்சரவையை பொறுத்தவரை பாஜகவுக்கு 31 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பீகாரில் அமைச்சரவையில் வாய்ப்பு என்பது வழங்கப்பட்டிருந்தது.
நிதீஷ்குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள். இதில் பெரும்பாலான முக்கியமான துறைகள் அனைத்துமே பாரதிய ஜனதா வசம் இருந்தது.
பாஜகவுக்கு துணை முதல்வர் மட்டுமல்லாமல் நிதித்துறை, நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மேம்பாடு ஆகிய துறைகள் என்பது வழங்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்லாமல் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றுச்சூழல், வனம், தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, சுகாதாரத் துறை, விவசாயம், கூட்டுறவு என அந்த மாநிலத்தின் முக்கிய இலாக்காக்களும் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் வசம் தான் இருந்தது.