பிரபல நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக கங்கனா ரணாவத் வலம் வருகிறார். இவர் தாகத் திரைப்படத்திற்கு பிறகு எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த எமர்ஜென்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை கங்கணா ரணாவத்துக்கு தற்போது டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். அதோடு படப்பிடிப்பு தளத்தில் கங்கனா மேற்கொள்ளும் பணிகள் குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கங்கனா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறார்கள்.
Get well soon our chief #KanganaRanaut pic.twitter.com/D3WV9IAZFW
— Manikarnika Films Production (@ManikarnikaFP) August 9, 2022