விழுப்புரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் மல்லிகைபட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி மாம்பழம் பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் இன்று வீட்டில் விஷம் அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்று மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையில், மாணவிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர், இதற்கு விருப்பம் இல்லாததால், காலையில் பள்ளிக்கு வந்த மாணவி வீட்டில் இருந்து வரும் பொழுதே மயக்க மருந்து சாப்பிட்டு வந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.