Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்….. கூண்டில் சிக்கிய குரங்குகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை செம்மண் மேடு பகுதியில் இருக்கும் ஏராளமான குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் துணிகளை எடுத்து செல்கிறது. நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர்.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் 2 கூண்டுகளை வைத்தனர். அந்த கூண்டுக்குள் இருந்த உணவுகளை பார்த்து ஓடிவந்த குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது. நேற்று மாலை வரை இரண்டு குண்டுகளிலும் 28 குரங்குகள் சிக்கியுள்ளன. அந்த குரங்குகளை வனத்துறையினர் பேரிஜம் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Categories

Tech |