அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தோட்டத்தை பராமரிக்கும் பணியை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முருகேஷ் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் அளவுக்கு அதிகமான மதுவை குடித்துவிட்டு அறையில் படுத்து தூங்கியுள்ளார்.
இதனை அடுத்து நள்ளிரவு நேரத்தில் திடீரென எழுந்த முருகேஷ் மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது கணவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.