கோத்தப்பய தாய்லாந்தில் தஞ்சமடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாலத்தீவில் இருந்து கோத்தப்பய சிங்கப்பூருக்கு சென்றார்.
இங்கிருந்து அதிபர் பதவியை கோத்தப்பய ராஜினாமா செய்ததால் இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தடுக்கப்பட்டார். இவரை எதிர்த்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது கோத்தப்பய ராஜபக்சே சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்திருக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கோத்தப்பய தற்காலிகமாக தாய்லாந்தில் தஞ்சமடைய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது .