அமெரிக்க நாட்டில் செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது எரித்திரியா நாடு. சிறிய நாடான இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகின்றது. தொடர்ந்து அடிக்கடி போர்களை சந்தித்து வருவதனால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. அதேசமயம் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தைத் தள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனை தடுக்கும் விதமாக எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயமாக இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இரண்டிற்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும் அது குற்றமாக கருதப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டிருக்கிறது. கணவரின் முதல் மனைவி இந்த திருமணத்தை எதிர்க்க கூடாது அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படும். என அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டத்தால் அங்கு வசிக்கும் ஆண்கள் மிகவும் குஷி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.