திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு என்ற பகுதியிள் வசிப்பவர் திவ்யபாரதி. இவர் துணை நடிகையாக அறிமுகம் ஆகி உள்ளார். இவர் சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராகவும் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷூட்டிங்கிற்கு வந்த தன்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்னதாக பிரபல துணை நடிகை திவ்யபாரதி கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார்.
அதில், “பகலவன் என்பவர் அவருடைய யூடியூப் சேனலில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் ஒப்பந்தம் போட்டார். அதன்பின், அவர் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். நான் அவரின் இச்சைக்கு உடன்படாததால், என்னைப் பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். நான் அவரிடம் எந்த பணமும் வாங்கவில்லை. முறையாக விசாரித்தால் உண்மை தெரியும்” கூறியுள்ளார்.