ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு பெண் 3,30,000 பவுண்டுகளை லாட்டரியில் வென்ற நிலையில் அந்த பணத்தை கழிவறையில் போட்டு வீணடித்திருக்கிறார்.
ஜெர்மன் நாட்டின் Essen நகரில் வசிக்கும் 63 வயதுடைய Angela Maiers என்ற பெண்மணிக்கு, லாட்டரியில் 3,30,000 பவுண்டுகள் கிடைத்திருக்கிறது. அந்த பணம் அவருக்கு கிடைத்தவுடன் வீட்டிற்கு வந்தவர், தன் வெற்றியை கொண்டாட ஐந்து பீர்களை குடித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.
அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனார். அது உயிரிழந்த அவரின் கணவரை பராமரித்த முதியோர் இல்லத்திலிருந்து கட்டணம் செலுத்துமாறு கடிதம் வந்திருக்கிறது. அதாவது அந்த முதியோர் இல்லத்தை சேர்ந்த நிர்வாகிகள் இவருக்கு லாட்டரியில் பரிசு கிடைத்த தகவலை அறிந்த பின் கட்டணத்தை கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
மது போதையில் இருந்த அவருக்கு அந்த கட்டண கடிதம் மகிழ்ச்சியை சிதறடிக்க செய்தது. எனவே, தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட பணம் வேறு யாருக்கும் சென்றடைய கூடாது என்று தீர்மானித்தார். உடனே, 500 நோட்டுகளை கிழித்து கழிவறையில் வீசி எறிந்தார். அதன் பிறகு கட்டணம் செலுத்து தன்னிடம் பணம் கிடையாது என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
மேலும், போதையில் தான் வைத்திருந்த அனைத்து பணத்தையும் கழிவறையில் போட்டு விட்டேன் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்த வழக்கில் நீதிமன்றம், மதுபோதையில் அவரின் பணத்தை அவர் வீணாக்கியது சட்ட விரோதமானது கிடையாது என்று தெரிவித்துவிட்டது. அதே சமயத்தில், கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதற்காக பணத்தை மறைத்து வைத்துக் கொண்டு அவர் பொய் கூறலாம் என்றும் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
எனவே, அவர் உண்மையைத்தான் கூறுகிறரா? என்பதை நிபுணர் ஒருவர் தான் தீர்மானிக்க முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதனைத்தொடர்ந்து அவர் இழப்பீடு தொகையாக 4000 யூரோக்கள் நீதிமன்றத்திற்கு செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.