Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்ப்பதற்கு சென்ற குடும்பம்….. மகளை பறிகொடுத்த பெற்றோர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீரளுர் கிராமத்தில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் என்ற மகனும், ஆர்.சந்தியா என்ற மகளும் இருந்துள்ளனர். தற்போது சிவசங்கர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து   சிவசங்கர் தனது குடும்படத்துடன்  உறவினர் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆர்.சந்தியா   அதே பகுதியை சேர்ந்த கவியரசன், விந்தியா, கே.சந்தியா  ஆகிய  6  பேருடன்  மிருகண்டா அணையை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஆர். சந்தியா, விந்தியா,கே.சந்தியா ஆகிய 3  பேரும் அணையின் மேல் உள்ள ஒரு  கல்லில் அமர்ந்து வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது திடீரென கல்லில் இருந்த பாசை வழுக்கி  3 பேரும் தண்ணீரில் தவறி விழுந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் விந்தியா, கே. சந்தியா ஆகிய 2  பேரையும் மீட்டனர். ஆனால்  ஆர். சந்தியாவை மீட்க முடியவில்லை.இதுகுறித்து  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி  ஆர்.சந்தியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |