நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான jio தனது வாடிக்கையாளர்களுக்கு ப்ரிபெய்டு, போஸ்ட் பெய்டு போன்ற பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. பிற தொலைதொடர்பு நிறுவனங்களை விட ஜியோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு அசத்தல் ஆஃபர்களுடன் 2,999 ஓராண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் அழைப்புகள், தினசரி 100 SMSகள் 365 நாட்கள் / ஓர் ஆண்டுக்கு வழங்கப்படும். மேலும், 75 ஜிபி கூடுதல் டேட்டா, 7499 மதிப்புள்ள ஓராண்டு டிஸ்னி-ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, அஜியோ -3750, நெட்மெட்ஸ் -3750, இக்சிகோ -750 தள்ளுபடி வவுச்சர் சலுகைகளும் கூடுதலாக வழங்கப்படுகிறது.