Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனைஓலைப்பாடி கிராமத்தில் கூலித்தொழிலாளியான காசிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று செங்கம்-போரூர் நெடுஞ்சாலையில் தனது மொபட்டில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் காசிவேலின் மொபட் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த காசிவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காசிவேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |